அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கியது. 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11-அன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11-ம் தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல் தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பெங்களூரு காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி இன்று (09.05.2015) பிறப்பித்துள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in