பெற்ற மகனை ஆற்றில் வீசி கொன்ற தாய்! -அன்னையர் தினத்தில் நடந்த அநியாயம்!

UntitledZymeir Perry Zymeir Perry1

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த Johnesha Monae Perry(19) என்பவர், தனது ஒரு வயது மகனான Zymeir Perry-வுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பென்னிஸ்லாவனியாவிற்கு கிழக்கு பகுதியில் உள்ள Lehigh என்ற ஆற்றிற்கு இன்று காலை தனது மகனுடன் சென்றுள்ளார்.

பாலத்தின் மீது நின்று தனது மகனை ஆசை தீர கொஞ்சி, முத்தமிட்டு பின்பு ஆற்றில் தூக்கி வீசிவிட்டு அவரும் குதித்துள்ளார்.

52 அடி உயரமுள்ள அந்த பாலத்திலிருந்து விழுந்த குழந்தை, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதை, அங்கு ரோந்து பணியிலிருந்த போலீசார் பார்த்து மீட்டுள்ளனர்.

கரைக்கு கொண்டு வந்து வாயோடு வாய் வைத்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், குழந்தை ஏற்கனவே பரிதாபமாக இறந்திருந்தது.

குழந்தையை தூக்கி வீசிவிட்டு ஆற்றில் குதித்த குழந்தையின் தாயார் சிறு காயங்களுடன் அவராகவே கரையை அடைந்துள்ளார்.

பெற்ற மகனை ஆற்றில் வீசி கொன்று பின்னர் தற்கொலைக்கு முயன்ற குற்றங்களுக்காக Johnesha-வை கைது செய்த போலீசார், கொலைக்கானக் காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

 -ஆர்.மார்ஷல்.