அ.இ.அ.தி.மு.க பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையாகியதை அடுத்து ஏற்காடு அ.இ.அ.தி.மு.க-வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஏற்காடு சேர்மேன் அண்ணா துரை மற்றும் ஏற்காடு துணை சேர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் அ.இ.அ.தி.மு.க.வினர் ஏற்காடு டவுண், ஜெரினாக்காடு, லாங்கில் பேட்டை, ஒண்டிக்கடை, அண்ணா சிலை, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில், புரட்சி தலைவி வாழ்க, நீதி நிலைநாட்டப்பட்டது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.
மேலும், பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இதில் ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி, மாணவரணி ஒன்றிய செயலாளர் புகழேந்தி, ஒன்றிய இணை செயலாளர் ஜான்சி ஆரிப்பால், பாலு, மனோ, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னர் இன்று காலை ஏற்காடு வண்டி ராமர் கோவிலில் ஜெ.ஜெயலலிதா விடுதலையாக வேண்டி யாகம் வளர்த்து வேண்டுதல் செய்தனர்.
-நவீன் குமார்.