இந்திய புள்ளியியல் சேவை (ISS) பயிற்சி அதிகாரிகள் குழு (2024 தொகுப்பு) இன்று (ஜனவரி 14, 2025) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது.
பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், புள்ளியியல் அம்சங்கள், அளவுசார் தொழில்நுட்பங்கள் ஆகியவை கொள்கை முடிவுகளுக்கு அனுபவ அடிப்படையிலான அடித்தளத்தை வழங்குவதாக கூறினார். இதன் மூலம் திறமையான நிர்வாகத்தில் இந்த அம்சங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன என்று அவர் கூறினார். சுகாதாரம், கல்வி, மக்கள்தொகை அளவு, வேலைவாய்ப்பு பற்றிய தரவுகளை சேகரிக்க அரசு தேசிய புள்ளிவிவர அமைப்புகளை நம்பியுள்ளது எனவும் இந்த தரவுகள் கொள்கை வகுப்பதற்கான அடிப்படையை உருவாக்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
கொள்கைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும், கண்காணிக்கவும், கொள்கை மறுஆய்வு செய்யவும், தாக்கங்களை மதிப்பீடு செய்யவும் அரசுக்கு தரவுகள் தேவை என்று குடியரசுத் தலைவர் கூறினார். அரசின் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும் குடிமக்களுக்கு தரவு தேவைப்படுகிறது என அவர் குறிப்பிட்டார். தரவுகளை சேகரிக்கும் போது சாதாரண மக்களின் குறிப்பாக ஏழைகள், பின்தங்கியவர்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ஐஎஸ்எஸ் அதிகாரிகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி வலியுறுத்தினார்.
திவாஹர்