2ஜி ஊழல் மற்றும் நிலக்கரி ஊழலில் தொடர்புடைய நபர்களை சந்தித்த சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்காவிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்கா.

சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்கா.

சி.பி.ஐ. முன்னாள் இயக்குனரான ரஞ்சித் சின்கா தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்தார். 

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 2ஜி ஊழல் மற்றும் நிலக்கரி ஊழலில் தொடர்புடைய நபர்களை பல முறை ரஞ்சித் சின்கா சந்தித்தது தவறு என்று கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றம், விசாரணை அதிகாரிகள் இல்லாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ரஞ்சித் சின்கா சந்தித்திருக்கக்கூடாது என்று தெரிவித்தது. எனவே, அவரிடம் விசாரணை நடத்தவேண்டியது அவசியமாகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

அவரிடம் எத்தகைய விசாரணை நடத்தவேண்டும் என்பதை மத்திய ஊழல் கண்காணிப்பு அலுவலகம், வரும் ஜூன் 7-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பிரசாந்த் பூஷண் பொய்யான வாக்குமூலம் அளித்துள்ளார் என்ற ரஞ்சித் சின்காவின் கூற்றையும் உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

-சி.மகேந்திரன்.