விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2024-ஐ குடியரசுத்தலைவர் வழங்கினார்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜனவரி 17,2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2024-ஐ குடியரசுத்தலைவர்  திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது -2024; துரோணாச்சாரியா விருது-2024 ; அர்ஜுனா விருது -2024 ;  டென்சிங் நார்கே தேசிய சாகச விருது -2023 ;  தேசிய விளையாட்டு ஊக்கத்தொகை விருது -2024 ;   மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோப்பை -2024  ஆகியவை இந்த விருதுகளில் அடங்கும்.

சிறந்த செஸ் விளையாட்டு வீரர் டி. குகேஷ், ஹாக்கி விளையாட்டு வீரர் ஹர்மன் பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார், துப்பாக்கிச் சுடும் வீரர் மனுபாக்கர் ஆகியோருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.

பேட்மிண்டன் பயிற்சியாளர் எஸ் முரளிதரன் உட்பட 5 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதுகள் வழங்கப்பட்டன. 34 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டன.  சாகச செயல்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது 2023  4 பேருக்கு வழங்கப்பட்டது.

தேசிய விளையாட்டு ஊக்கத்தொகை விருது 2024, இந்திய உடற்பயிற்சி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது

பஞ்சாபில் உள்ள  சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோப்பை வழங்கப்பட்டது. 

Leave a Reply