காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்ப சொந்த நிதியில் கட்டப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையும் திறந்து வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் சிவகங்கை மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார். காரைக்குடி பல்கலை. விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றும் அவர், நாளை 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். திட்டங்களின் செயல்பாடுகள், முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.
அதன்படி இன்றும், நாளையும் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவி வழங்கல், திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல், முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
கே.பி.சுகுமார்