மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்ட அமலாக்க அமைப்பான கோயம்புத்தூர் மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், ஜவுளித் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள ஒருவரின் வரி நடைமுறைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயரில் இல்லாத 36 நிறுவனங்களை உருவாக்கி நிர்வகித்து வந்தார். விசாரணையின் போது, அவர் 36 போலி நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மோசடியான உள்ளீட்டு வரி (ஐ.டி.சி) பெற்றுள்ளார் என்றும் போலி விலைப்பட்டியல் அடிப்படையில் சரக்குகளை விநியோகிக்காமல் மோசடி நடைமுறைகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
துறை நடத்திய விசாரணையில், அந்த நபர் ரூ. 267 கோடி வரி விதிக்கக்கூடிய மதிப்பில் சுமார் ரூ. 14 கோடி அளவுக்கு மோசடியான உள்ளீட்டு வரி வரவு பெற்றுள்ளதும் ரூ. 309 கோடி வரி விதிக்கக்கூடிய மதிப்பில் சுமார் ரூ. 16 கோடியை மோசடியாக உள்ளீட்டு வரி பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.
விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ள நிலையில், அந்த நபர் கோயம்புத்தூர் மண்டலப் பிரிவின் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரக (டிஜிஜிஐ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திவாஹர்