பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில், மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.3.13ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.71ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கட்டுள்ளது.
கடந்த 1-ம் தேதியும் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3.96ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.37ம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், அத்திவாசிய பொருட்கள் உள்பட, அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் கவலையடைந்து உள்ளனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.