ரஷ்ய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை  சந்தித்தனர்.

ரஷ்ய கூட்டமைப்பின் மாகாணத் தலைவர் திரு வியாசெஸ்லாவ் வோலோடின் தலைமையிலான ரஷ்ய கூட்டமைப்பின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவினர், இன்று (பிப்ரவரி 3, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

இந்தக் குழுவை வரவேற்ற குடியரசுத் தலைவர், பொதுப் பிரதிநிதிகளிடையே இதுபோன்ற பரிமாற்றங்கள் வலுவான ஒத்துழைப்பை வளர்ப்பது மட்டுமல்லாமல், கூட்டாண்மையானது சமகாலத்துடனும் புதுப்பித்தலுடனும் அமைவதற்கு காரணமாக உள்ளது என்று கூறினார்.

இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஆணையம் போன்ற வழிமுறைகள் ஒத்துழைப்பை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன என்று அவர் கூறினார். இந்தியா மற்றும் ரஷ்யாவின் பெண்கள் மற்றும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான நெருங்கிய பகிர்வுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

புதுதில்லியில் உலக புத்தகக் கண்காட்சியை தாம் தொடங்கி வைத்ததாக குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் அதில் ரஷ்யா குறித்து சிறப்பு கவனம் அளிக்கப்பட்டதாகக் குழுவினருடன் பகிர்ந்து கொண்டார். ரஷ்யாவின் வளமான இலக்கியப் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள இந்தக் கண்காட்சி இந்திய வாசகர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார். கலாச்சார மற்றும் கலைத் துறைகளில் இருதரப்பு ஈடுபாடுகள் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply