குழாய் மூலம் வீடுதோறும் சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கை..!

குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான  இணைப்புகளை வழங்குவது, நகர்ப்புற எரிவாயு விநியோக கட்டமைப்பு ஆகியவை வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். மேலும் இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. நகர்ப்புற எரிவாயு விநியோக கட்டமைப்பின் வளர்ச்சிக்காக 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 733 மாவட்டங்களில்  307 புவிசார் பகுதிகளைக் கண்டறிந்து, 100 சதவீதம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஜார்கண்ட் மாநிலம் முழுவதையும் உள்ளடக்கிய 11 பகுதிகளில்  (பீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள 3 பகுதிகள் உட்பட) இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

நாட்டில் நகர்ப்புற எரிவாயு விநியோகத்திற்கான கட்டமைப்பு பணிகளை செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த தகவலை மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply