இந்தியா மற்றும் ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையிலான 5வது கூட்டுப் பணிக்குழு கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. சர்வதேச ஒத்துழைப்புக்கான இணைச் செயலாளர் ஸ்ரீ அமிதாப் பிரசாத், மற்றும் பாதுகாப்புக் கொள்கை பொதுச் செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் பவுலினோ கார்சியா டியாகோ ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் கூட்டு நடவடிக்கை திட்டங்கள் குறித்தும் இருதரப்பும் விவாதித்தனர். பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் ஆயுத உற்பத்தித் துறைகளில் இணைந்து கவனம் செலுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
திவாஹர்