போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு உறுதியுடன் உள்ளது : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பணத்தின் பேராசைக்காக நமது இளைஞர்களை போதைப்பொருள் என்ற இருண்ட படுகுழியில் இழுத்துச் செல்லும் போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.

சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உறுதியான விசாரணையின் விளைவாக, நாடு முழுவதும் இந்த ஆண்டில் (2025) மட்டும் 12 வெவ்வேறு வழக்குகளில் 29 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

12 வழக்குகளின் விவரம்:

2019 -ம் ஆண்டுக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளின் விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு இந்த ஆண்டில் இதற்கான தீர்ப்புகள் வெளிவந்துள்ளன.

அகமதாபாத், போபால், சண்டிகர், கொச்சின், டேராடூன், தில்லி, ஐதராபாத், இந்தூர், கொல்கத்தா

லக்னோ ஆகிய மண்டலங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தண்டனைகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை வெற்றிகரமாக நடத்துவதை உறுதி செய்வதற்கான தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் (NCB) அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாகும். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், போதைப்பொருள் இல்லா இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் பார்வையை நனவாக்க போதைப்பொருள் தடுப்பு வாரியம் அயராது உழைத்து வருகிறது. போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் என்சிபி மக்களின் ஆதரவை நாடுகிறது. போதைப்பொருள் கடத்தல் பற்றிய தகவல்களை என்சிபி-யின் மனாஸ் (MANAS) உதவி எண் 1933-ல் தெரிவிக்கலாம்.

Leave a Reply