அ.இ.அ.தி.மு.க பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதா வரும் 23-ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பதவியேற்க உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ரவிராஜ் குல்கர்னி என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேணுகோபால கவுடா, வீரப்பா ஆகியோர் கொண்ட அமர்வு, விளம்பர நோக்கில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக கூறி வழக்கறிஞர் ரவிராஜ் குல்கர்னி மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in