டிஜிட்டல் மாற்றத்துக்கான விருது 2025-ஐ வென்றதற்காக இந்திய ரிசர்வ் வங்கிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்ர. ரிசர்வ் வங்கிக்கு டிஜிட்டல் மாற்றத்துக்காக இந்த ஆண்டுக்கான (2025) விருது, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள மத்திய வங்கியால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் வல்லுநர் குழுவால் உருவாக்கப்பட்ட அதன் புதுமையான டிஜிட்டல் முயற்சிகளான பிரவா, சார்த்தி ஆகியவற்றை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது.
இந்த சாதனையைப் பாராட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
“இது ஒரு பாராட்டத்தக்க சாதனை. நிர்வாகத்தில் புதுமையையும் சிறந்த செயல்திறனையும் இது பிரதிபலிக்கிறது.
டிஜிட்டல் புதுமைக் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் நிதிச் சூழல் அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்துகிறது. இதனால் எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.”
எம்.பிரபாகரன்