ஜெ.ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை: தமிழக ஆளுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

pr220515b

ஆளுநரை சந்தித்த ஜெஜெயலலிதா.

ஆளுநரை சந்தித்த ஜெஜெயலலிதா.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா, நாளை (23.05.2015) தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் புதிய தமிழக அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. புதிய அமைச்சரவையில் ஜெ.ஜெயலலிதாவுடன் சேர்த்து மொத்தம் 29  அமைச்சர்கள்  இடபெறுகிறார்கள்.

இன்று (22.05.2015) பிற்பகல் ஆளுநரை சந்தித்த ஜெஜெயலலிதா, தனது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பட்டியலை வழங்கினார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

இதனையடுத்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை (23.05.2015) காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில், ஜெ.ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in