சவுதி அரேபியா நாட்டில் உயிரிழந்த தமிழக மீனவர் குடும்பத்திற்கு, ரூ.5 லட்சம் : தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவிப்பு!

jayalalithapn31051523

இது குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் மதிவளன் இறப்பால் அவரது குடும்பம் துயரம் அடைந்துள்ளது. அவரது உடலை விரைவாக கொண்டுவரவும் முடியாத நிலை உள்ளது.

எனவே, சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நேரடியாக தொடர்பு கொண்டு அவரது உடலை கொண்டு வர உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து முழு பணப்பயன்களை பெற்று தரவும் இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதத்தில் கூறி உள்ளார்.

pr310515252-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in