சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் மகன் அரவிந்தன்(வயது 25) ஏ.வி.எஸ். கல்லுரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார், செல்வராஜ் மகன் அரவிந்த்(வயது 22) சேலம் சி.எஸ்.ஐ.பாலிடெக்னிக் கல்லுரி டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இவர்கள் இருவரும் டி.வி.எஸ்.மேக்ஸ் ஆர் 100 பைக்கில் ஏற்காடு வந்துள்ளனர்.
இவர்கள் ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு, மதியம் வீடு திரும்பியுள்ளனர். பைக்கை செல்வராஜ் மகன் அரவிந்த் ஓட்டி வந்துள்ளார். மதியம் 3 மணியளவில் 40 அடி பாலத்திற்கு அருகில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
பைக்கின் பின்புறம் அமர்ந்து வந்த ரவிச்சந்திரன் மகன் அரவிந்தன் எதிரே வந்த பத்ரகாளியம்மன் டிப்பர் லாரி டையரில் எகிறி விழுந்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
பைக்கை ஓட்டி வந்த அரவிந்த் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு போலீசார், லாரியை ஓட்டி வந்த டிரைவர் சேலம் சுரமங்களம் பகுதியை சேர்ந்த துரை சாமி மகன் குமார்(வயது 48)யை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
– நவீன் குமார்.