முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, வேட்பு மனுத் தாக்கல் செய்தார்!

rknagar-jj-nomination

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, இன்று (05.06.2015) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

PR_05Jun2015_Nominy_000001

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல், ஜூன் 27-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதற்காக இன்று பிற்பகல் போயஸ்தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் இருமருங்கிலும் கூடியிருந்த பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். செண்டைமேளங்கள், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக் கருவிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கழக மகளிர் அணியினர் பூரண கும்பம் ஏந்தி, முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். மேலும், படுகர் இனத்தவர்வர்கள் நடனமாடி முதலமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். தண்டையார்பேட்டை தேர்தல் அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, தேர்தல் அதிகாரியான சவுரிராஜனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

மனுத்தாக்கல் செய்த பிறகு வெளியே வந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அங்கு குழுமியிருந்த மக்களை நோக்கி, இருவிரல்களை உயர்த்திக் காண்பித்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

-ஆர்.அருண்கேசவன்.