சூரிய மின்சக்தியில் இயங்கும் காவல் நிலையம்!

????????????????????????????????????????

சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் (solar energy) எனப்படுகிறது. சூரியனிலிருந்து பெறப்படும் ஒளி சூரியக்கலங்கள் (solar cell) மூலம் நேர் மின்சார ஆற்றலாக மாற்றம் பெறுகின்றன. இந்த மின்சாரத்தை மின்கலங்களில் சேமித்து தேவையான போது உபயோகிக்கலாம். இன்று, உலகின் பல பகுதிகளில், இரவு நேரங்களில் தெருக்களில் வெளிச்சத்துக்காகவும், கிராமங்களில் நீர்ப்பாசன மோட்டார்களை இயக்குவதற்கும், சூரியக் கலங்கள் வெற்றிகரமாக உபயோகப்படுத்தப்படுகின்றன.

நாகப்பட்டிணம் மாவட்டம், நாகப்பட்டிணம் நகர காவல் நிலையத்தில், மின்சாரத்திற்கு பதிலாக, சூரிய சக்தியில் (solar energy) உருவாகும் மின்சாரத்தைப் பயன்படுத்தி, காவல் நிலையத்தை இயக்கி வருகின்றனர். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சூரிய சக்தி பயன்பாடு அனுபவம் குறித்து, நாகப்பட்டிணம் நகர காவல் நிலைய ஆய்வாளர் என்.முத்துசாமியிடம் இன்று (07.06.2015) மதியம் 1.50 மணிக்கு தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

சூரிய சக்தியின் செயல்பாடு, மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், தொடர் மழை மற்றும் மேகமூட்டம் உள்ள காலங்களை தவிர, மற்ற அனைத்து தருணங்களிலும், சூரிய சக்தியில் உருவாகும் மின்சாரத்தை பயன்படுத்திதான் காவல் நிலையம் செயல்படுவதாகவும் உறுதி அளித்தார்.

இதுப்போன்று அனைத்து அரசு அலுவலங்களையும், சூரிய சக்தியில் செயல்படுவதற்கு, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் மிகை மின் மாநிலமாக, தமிழகம் எப்பொழுதும் ஜொலிக்க முடியும்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in