ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் திருடியவர் கைது!

?????????????

ஏற்காடு, போட்டுகாடு கிராமத்தில் உள்ளது பேரடைஸ் ரெசிடென்சிஸ் ஹோட்டல். இதன் உரிமையாளர் அமல புஷ்ப மேரி, ஹோட்டல் அருகிலேயே உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று தனது ஹேண்ட்பேக்கில் உள்ள 1 1/2 பவுண் நகை மற்றும் 3 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தனது ஹோட்டலில் பணி புரியும் ரவி மகன் சுரேஷ்(வயது 23) தனக்கு உணவு கொண்டு வந்து வைத்துவிட்டு போனதால், அவர் மீது சந்தேகம் அடைந்து, ஏற்காடு காவல் நிலையத்தில் சுரேஷ் மீது புகார் அளித்தார்.

காவல் துறையினர் சுரேஷை விசாரித்ததில், தான் திருடியதாக ஒப்புக்கொண்டு, நகை மற்றும் பணத்தை ஒப்படைத்தார்.

ஏற்காடு காவல் துறையினர், இது குறித்து வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.       

-நவீன் குமார்.