தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.மாலாதேவி என்பவர், தனது சுய இலாபத்திற்காகவும், பொது நன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், முறைகேடுகள் புரிந்து அரசு விதிமுறைகளை மீறி, ஊராட்சிக்கு ரூ.12,27,725/– நிதியிழப்பை திட்டமிட்டு ஏற்படுத்தியும், அதிகார துஷ்பிரயோகமும் செய்துள்ளதாலும், பொது நன்மையைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 உட்பிரிவு 11- இல் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.மாலாதேவி என்பவரை நீக்கம் செய்து 10.06.2015 அன்று அரசு சிறப்பு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 இல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, நல்ல முறையில் நிர்வாகம் நடத்திடவும், ஊராட்சிகளுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தாவண்ணம் செயல்படவும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இதர கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-பி.இசக்கி @ கணேசன்.