கடந்த 2008 முதல் 2010 வரை ஐ.பி.எல்., தலைவராக இருந்தவர் லலித்மோடி. ஐ.பி.எல் முறைகேடு புகாரில் சிக்கினார், இவர் நிதி முறைகேடு செய்தது நிரூபணம் ஆனது. இதனால் இவர் தலைவர் பதவியை இழந்தார்.
இதையடுத்து, இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு, கடந்த 2013, செப்டம்பர் மாதம் வாழ்நாள் தடை விதித்தது. இந்த புகார் எழுந்த போது, லலித்மோடி பிரி்ட்டிசில் குடியேற முடிவு செய்தார்.
கடந்த 2014-ல், லலித்மோடி பிரி்ட்டிசில் குடியேற காலம் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரிட்டிஷ் குடியேற்ற அதிகாரிகளிடம் லலித்மோடிக்காக சிபாரிசு செய்துள்ளார்.
லலித் மோடிக்காக, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிபாரிசு செய்தார் என்றும், இந்த விஷயத்தில் அவர் அவசரப்பட்டார் என்றும், பிரிட்டிஷ் லேபர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஷ், செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அளித்துள்ள விளக்கத்தில், கடந்த 2014-ல் என்னிடம் லலித் மோடி பேசியுள்ளார், இவரது மனைவி நோய் பாதிப்பு காரணமாக மனிதாபிமான அடிப்படையில் நான் குடியேற்ற சான்று விரைவில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமலாக்க பிரிவினரால் “குற்றவாளி” என்று கூறப்பட்டுள்ள லலித் மோடிக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு உண்மை என்றால், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும்.
இப்பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷகீல் அகம்மது கூறி உள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.