ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கியவர், இலங்கை பொதுத் தேர்தலில் போட்டியிட திட்டம்!

விஜித ரோஹன விஜேமுனி .

விஜித ரோஹன விஜேமுனி .

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கிய, இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித ரோஹன விஜேமுனி எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபல சேனா அமைப்பு ஆரம்பிக்கும் அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

raji attack in srilanka

1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி இந்திய-இலங்கை உடன்படிக்கையில் கையெழுத்திட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றிருந்தார்.

அப்போது அவருக்கு கடற்படையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதை வழங்கும் கடற்படை அணியில் இருந்த, விஜித ரோஹன விஜேமுனி, ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கினர். அந்த தாக்குதலில் இருந்து ராஜீவ் காந்தி மயிரிழையில் உயிர் தப்பினார்.

ராஜீவ் காந்தியை தாக்கிய விஜித ரோஹன விஜேமுனி தற்போது சோதிடராக செயற்பட்டு வருகிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மரண கண்டம் இருப்பதாகவும், அவர் இறப்பதை தவிர்க்க முடியாது எனவும், விஜிதமுனி ஆருடம் கணித்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பு, தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றில் அந்த அமைப்பை இணைத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.

அந்த கட்சியில் விஜித ரோஹன விஜேமுனி போட்டியிட தீர்மானித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-வினித்.