சிறு,குறு தானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!

ye1506P1

ஏற்காடு, அரங்கம் கிராமத்தில், வேளாண்மை துறை சார்பில், மாநில சமச்சீர் வளர்சி நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு தானியங்கள் விவசாயம் குறித்து பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

இந்நிகழ்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாரதிநாதன் தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் ஜோஸ்வா அனைவரையும் வரவேற்றார்.

வேளாண்மை அலுவலர் மகாலட்சுமி சிறு, குறு தானியங்களின் முக்கியத்துவம், சிறப்பியல்பு, சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். மேலும் சாமை இரகங்கள், மகசூல் குறித்தும் விளக்கினார்.

தோட்டகலை ஆராய்சி துறை பேராசிரியர் துரைராஜ் சாமை தானியத்தின் நன்மைகள், சாமையில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பது குறித்து எடுத்துரைத்தார்.

அரங்கம் பகுதி  உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் குமார் சாமை விதை நேர்த்தி செய்து காண்பித்தார்.

இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், புது வாழ்வு திட்ட உறுப்பிணர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.        

    -நவீன் குமார்.