திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, நன்னிலம் பேரூராட்சியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் 2௦15 -2016 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அதில் போதுமான இட வசதி இல்லாததால், புதியதாக இன்னொரு இளங்கலை ஆங்கிலம் வகுப்பு கொண்டு வருவதற்காக கல்லூரி முதல்வர், ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் நிர்வாக அலுவலர் G.விஜயகுமார் ஆகியோர், பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு அனுமதி கேட்டுள்ளார்கள். விரைவில் அனுமதி கிடைத்து இந்த ஆண்டே சேர்க்கை நடைபெறும் என்று தெரிகிறது.
முதுகலை தமிழ் வகுப்பும் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.
-நாகை கதிரவன்.