போக்குவரத்துத் துறையில் நிதி முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்துத் துறையில் ரூ.32.88 லட்சம் நிதி முறைகேடு நடந்ததாக கோவிந்தராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, போக்குவரத்துத் துறையில் நடந்த முறைகேடு குறித்து தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
-என்.சதிஸ்.