சிரிப்பதற்கு ஒரு காலம்! அழுவதற்கு ஒரு காலம்! –கருணாவின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்!

sri-lankan-minister-karuna

கருணா என்கிற விநாயகமூர்த்தி கிழக்கு இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரானில் பிறந்தவர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 ஆண்டில் இணைந்தார். 2003 ஆம் ஆண்டில் இவர் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனால் கிழக்கு மாகாண மட்டு அம்பாறை விசேட கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா.

தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கு இலங்கைப் போராளிகளுக்கு அவர்களது அமைப்பில் தகுந்த மதிப்பு, வாய்ப்புக்கள் தரப்படவில்லை என்றும், கிழக்கு போராளிகள் பயன்படுத்தப்பட்டு வீணாக பலியிடப்பட்டனர் என்றும், புலிகளின் வடக்கு மைய தலைமையை குற்றம்சாட்டி, கருணா தலைமையில் புலிகளின் பல கிழக்கு போராளிகளும், தலைவர்களும் ஏப்ரல் 2004 பிளவுபட்டார்கள்.

கருணா புரிந்துணர்வு ஒப்பந்தம் தம்முடனும் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். விடுதலைப் புலிகளோ ஒழுங்கு நடவடிக்கை காரணமாக, இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர்.

இவர்களின் பிரிவு, அரசியல், இராணுவ ரீதியில் புலிகளுக்கு பின்னடைவையும், ஒரு புதிய எதிர்ப்பு சக்தியையும் தோற்றுவித்தது.

கருணா குழுவினர் மட்டக்களப்பில் சிறுவர்களை வலுக்கட்டாயமாகப் படையில் சேர்த்தனர். இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்குவதால், இலங்கை இராணுவத்தினரும், சிங்கள ஆட்சியாளர்களும் இவர்களின் நடவடிக்கைக்கு ஆதரவளித்தனர். 

கருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர், மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியதை அடுத்து, இலங்கை அரசினால் போலிக்கடவுச் சீட்டு வழங்கப்பட்டு, இரகசியமாக லண்டனுக்கு சென்ற  கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக அங்கு காவல்துறையினரால் நவம்பர் 2, 2007 ல் கைது செய்யப்பட்டார்.

வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் நுழைந்த வழக்கில் கருணாவுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் கருணா குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு ஜூலை 2, 2008 புதன்கிழமை, இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார்.

mahinda-karuna

ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வலதுகரமாகவும், அவரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்த கருணா என்கிற விநாயகமூர்த்தி, பிறகு மஹிந்த ராஜபக்ஷவின் வசிய வார்த்தைகளுக்கு மயங்கி, சிங்கள ஆட்சியாளர்களின் கைகூலியாக மாறி, ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் காட்டி கொடுத்தார்.

karuna @ vinayamoorthy

அதற்கு பரிசாக பல்வேறு பதவிகளையும், சலுகைகளையும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அவருக்கு வழங்கியது. மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் செல்லப் பிள்ளையாக ஸ்ரீலங்கா முழுவதும் வலம் வந்தார்.

கோத்தபாய ராஜபக்ஷவுடன் கருணா.

கோத்தபாய ராஜபக்ஷவுடன் கருணா.

karuna @ vinayamoorthy.jpgRamada-Dance

அவற்றின் விளைவாக பல்வேறு களியாட்டஙகளில் ஈடுப்பட்டார். இலங்கை மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த கருணா என்கிற விநாயகமூர்த்தி, தனக்கு இருந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டார். மேலும், அரசு மற்றும் தனியார் நிலங்களை அபகரித்து, அதில் இறால் பண்ணைகளை அமைத்து தன்னை வளமாக்கிக் கொண்டார்.

கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையை ஆக்கிரமித்தமை தொடர்பாக, கருணா என்கிற விநாயகமூர்த்திக்கு எதிராக, அவர் அமைச்சராக இருந்த போதே (2012-ல்) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஆட்சிமாறியதால் அதிரடியாக காட்சிகளும் மாறிவருகிறது.

மஹிந்த ராஜபக்ஷ, அவரது மனைவி ஷிரந்தி, மகன்கள் நாமல் ராஜபக்ஷ, யோசித்த ராஜபக்ஷ, ரோகித்த ராஜபக்ஷ.

மஹிந்த ராஜபக்ஷ, அவரது மனைவி ஷிரந்தி, மகன்கள் நாமல் ராஜபக்ஷ, யோசித்த ராஜபக்ஷ, ரோகித்த ராஜபக்ஷ.

மஹிந்த ராஜபக்ஷ, அவரது மனைவி ஷிரந்தி, மகன்கள் நாமல் ராஜபக்ஷ, யோசித்த ராஜபக்ஷ, ரோகித்த ராஜபக்ஷ மற்றும் சகோதரர்கள் கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர்கள் மீது பல்வேறு முறைகேடுகள்,  ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்  வெளியாகும் வரை, சுகப் போகமாக ராஜ வாழ்கை வாழ்ந்து வந்த அவர்கள், தற்போது வழக்கு விசாரணை, ஜெயில், பிணை… என்று நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். எங்களின் உயிருக்கு இங்கு உத்திரவாதம் இல்லை என்று பகிரங்கமாகவே கூக்குரலிட்டு  வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினருக்கே இந்த நிலமை என்றால், கருணாவின் நிலமையை நாம் சொல்லதான் வேண்டுமா?! சிரிப்பதற்கு ஒரு காலம்! அழுவதற்கு ஒரு காலம்! என்ன செய்வது, விதைத்ததை தானே அறுவடை செய்ய முடியும்.

karunaa

தான் நிம்மதியாக வாழ்வதற்கு எந்த துரோகத்தையும், பலி, பாவத்தையும், துணிந்து செய்வதற்கு கருணா இப்போதும் தயாராகதான் இருக்கிறார். ஆனால், அவரை நம்புவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் யாரும் இப்போது தயாராக இல்லை.

கருணாவை கைது செய்தால், மஹிந்த ராஜபக்ஷவின் ரகசியங்கள் அனைத்தும் வெளிவரும். இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்ற முழு விபரங்களும் உலகிற்கு வெளிவெட்ட வெளிச்சமாகும்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in