பிரதமர் நரேந்திரமோதி தலைமையிலான அமைச்சரவையில், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள ஸ்மிரிதி இரானி கல்வி சான்றிதழ் முரண்பாடு மீதான வழக்கை வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஸ்மிருதி இரானி, கடந்த 2004, 2011, 2014 ஆம் ஆண்டுகளில் தேர்தலின்போது தாக்கல் செய்த கல்வித் தகுதி தொடர்பான சான்றிதழ்களில் முரண்பட்டதாகவும், தவறாக இருப்பதாகவும் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி ஆகாஷ் ஜெயின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்ட அமைச்சர் டோமர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதங்கள் வைக்கப்பட்டன.
மேலும் இவ்வழக்கை வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த எழுத்தாளர் அமீர்கான் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், அமைச்சர் இஸ்மிருதி இரானி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ள தனது கல்லூரி பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் வெவ்வேறு வருடங்களைச் சேர்ந்தவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோதும் இவர் நேர்மையாக இல்லாமல் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
இவ்விவகாரம் இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஸ்மிரிதி இரானிக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in