தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்!

ye2606P1

ஏற்காடு வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் சிறப்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு சேலம் மாவட்ட பிரச்சார குழு தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைப்பெற்றது.

அரசாணை எண் 570-ன் படி 295 கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை பிறப்பித்தும், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் காலம் தாழ்த்துவதை கண்டித்தும், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரியும், ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு சேம நல நிதி ரூ. 5,000 ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படுவது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்பாட்டதிற்கு சங்கத்தின் வட்ட தலைவர் பரமேஷ் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் சங்கர் விளக்க உரை ஆற்றினார். வட்ட பிரச்சார குழு தலைவர் முரளி நன்றி கூறினார். ஆர்பாட்டத்தில் 40 கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர். 

-நவீன் குமார்.