ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சராசரியாக 74.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. 5 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்றவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 74.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பெண் வாக்காளர்கள் 74.8 சதவீதமும், ஆண் வாக்காளர்கள் 74 சதவீதமும் வாக்களித்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 30-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
-கே.பி.சுகுமார்.