பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த “டிஜிட்டல் இந்தியா திட்டம்” கடந்த 1 ஆம் தேதி முதல், வரும் 7 ஆம் தேதி வரை, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இத்திட்டம் இன்று காலை 12 மணியளவில், ஏற்காடு அஞ்சலகத்தில் அஞ்சல் உதவி துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் ஏற்காடு புனித ஜோசப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அஞ்சலகத்தின் தபால் சேவைகள், சிறு சேமிப்பு சேவைகள், தபால் தலைகள் சேகரிப்பு, இது குறித்து விளக்கப்பட்டது. வந்திருந்த மாணவர்களுக்கு போஸ்ட் கார்டுகள் வழங்கப்பட்டு தபால் எழுத ஊக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் மாணவர்களுக்கு தபால் எழுதும் பழக்கங்கள் குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏற்காடு அஞ்சலக அதிகாரி கதிர், ஒண்டிக்கடை அஞ்சலக அதிகாரி தனபால், புனித ஜோசப் பள்ளி ஆசிரியர் ஜெரோம், மற்றும் தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
– நவீன் குமார்.