பச்சிளம் குழந்தைக்கு மதுவை குடிக்கச் சொல்லி வற்புறுத்திய சம்பவம் தொடர்பாக, காவல்துறை அதிரடி நடவடிக்கை!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர்  ஆர்.பொன்னி.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி.

Untitled


பொது இடத்தில் ஒரு இளைஞர் கும்பல், சுமார் 3 வயது மதிக்கத்தக்க பச்சிளம் குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து, மதுவை குடிக்கச் சொல்லி வற்புறுத்தும் மிக கொடூரமான சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு, நமது “உள்ளாட்சித்தகவல்” இணைய ஊடகம் மூலம், 05.07.2015 அன்று  மதியம்  12.14 மணிக்கு காவல்துறை மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அந்த வீடியோ பதிவை அனுப்பி வைத்து இருந்தோம். அதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  ஆர்.பொன்னி உத்தரவின் பேரில், போளுர் டிஎஸ்பி ஆர்.கணேசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இது சம்மந்தமாக போளுர் தாலுக்கா, மேல்சோழன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் ஏழுமலை  மற்றும் காளியப்பன் என்பவரின் மகன் பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் மீது இந்திய தண்டணை சட்டம் (147-கலகம் விளைவித்தல், 363- பிள்ளைப்பிடித்தல், 307- கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுக்குறித்து இன்று (06.07.2015)  இரவு 7.40 மணிக்கு போளுர் டிஎஸ்பி ஆர்.கணேசனிடம் அவரது அலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை போலீசார் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாம் புகார்  தெரிவித்து 24 மணிநேரத்திற்குள் அதிரடி நடவடிக்கை எடுத்த  தமிழக காவல் துறைக்கு எமது“உள்ளாட்சித்தகவல்” இணைய ஊடகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்.

-டாக்டர். துரைபெஞ்சமின்.