ஏற்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில், இன்று ஏற்காடு தாசில்தார் கிருஷ்ணன் தலைமையிலும், ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி முன்னிலையிலும், அம்மா திட்ட முகாம் நடைப்பெற்றது.
இந்த முகாமிற்கு பொதுமக்கள் மிக குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். தாலுக்கா அலுவலகம் சார்பில் பொதுமக்களுக்கு சரியானபடி முன்கூட்டியே தகவல் கொடுக்காததால்தான், பொதுமக்கள் முகாமிற்கு குறைவாக வந்ததுள்ளதாக, ஏற்காடு 2 வது வார்டு உறுப்பினர் குணசேகரன், வட்டாச்சியர் கிருஷ்ணன் மற்றும் ஏற்காடு டவுன் வி.ஏ.ஓ. பாஸ்கர் ஆனந்திடமும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
இது குறித்து தாசில்தார் கூறியதாவது:
நான் 6 மாதத்திற்கு முன்னரே அம்மா திட்ட முகாம் நடத்தும் இடம் மற்றும் தேதிகள் குறித்து சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.க்களுக்கு அறிக்கை கொடுத்து விட்டேன். அதனால் பொது மக்களிடம் தகவல் தெரிவிப்பது அப்பகுதி வி.ஏ.ஓ.வின் வேலை. அதனால் இங்கு அதிகளவில் பொதுமக்கள் வராததற்கு நான் என்ன செய்யமுடியும்? என்று கூறினார்.
பொது மக்களிடம் தகவல் தெரிவிக்காத கிராம நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி, மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பரிந்துரைக்கலாமே?
-நவீன் குமார்.