ஏற்காடு மலைமுகடுகள் மற்றும் பாறைகளை தகர்க்கும் சமூக விரோதிகள்! -கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்!

???????????????????????????????

???????????????????????????????

ஏற்காடு மலைப் பகுதியானது தமிழகத்தில் உள்ள சுற்றலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். ஏற்காடு கடல் மட்டத்தில் இருந்து 4,970 அடி உயரமானது. இங்கு வருடந்தோறும் பெருமளவு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே நிலவுகிறது. இதனால் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இத்தகைய பெருமை வாய்ந்த ஏற்காடு மலையின் இயற்கை எழிலை கெடுக்கின்ற வகையில் மலைமுகடுகள், மற்றும் பாறைகளை சமூக விரோதிகள் கம்பசர்களை கொண்டு உடைத்து நாசமாக்குகின்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து  3000 அடிய உயரம் உள்ள இடத்தில் கம்ப்ரசர்களை பயன்படுத்தக் கூடாது என்ற அரசு விதிமுறை இருக்கும் நிலையில், 4,970 அடி உயரம் உள்ள ஏற்காடு மலையில் கம்ப்ரசரை பயன்படுத்துவது மிகப்பெரிய விதிமீறல் மட்டுமின்றி, இயற்கையை அழிக்கும் செயல் ஆகும்.

இன்று ஏற்காடு டவுன் பகுதியிலேயே, படகு இல்லத்திற்கு மிகஅருகில் உள்ள இடத்தில், தனியார் விடுதி கட்டுவதற்காக பாறைகள் நிறைந்த மலை முகட்டை அந்த இடத்தின் உரிமையாளர் TN 50 Z 3276 என்ற எண் உடைய கம்ப்ரசர் வாகனம் கொண்டு உடைத்து கற்களை மலை போல் குவித்துள்ளார். இவ்வாறு பல்வேறு இடங்களில் கம்ப்ரசர் கொண்டு ஏற்காடு மலையை உடைத்து நாசமாக்கி வருகின்றனர். ஆனால், அரசு அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. ஏற்காட்டின் மீதமுள்ள இயற்கை எழிலையாவது காப்பாற்றுவார்களா?

 -நவீன் குமார்.