ஏற்காட்டில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருந்த தொழிலாளர்களிடம், தாசில்தார் பேச்சவார்த்தை!

ye1607P3 (1)

ஏற்காடு தாலுக்கா அலுவலகத்தில்,  நீலமலை தோட்ட தொழிலாளர் சங்கம்  சார்பில், அரசு தோட்டகலை பண்ணையில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க வேண்டி வரும் 19 ஆம் தேதி ஏற்காடு அண்ணா பூங்கா அருகில் நடக்கவிருந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்த வேண்டி, தொழிலாளர்களிடம் ஏற்காடு தாசில்தார் கிருஷ்ணன் மற்றும் ஏற்காடு இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் இன்று மாலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை பேச்சவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களும், நீலமலை தோட்ட தொழிலாளர் சங்க பொது செயலாளர் வீ.க.நல்லமுத்து ஆகியோரும், தோட்டகலை பண்ணை சார்பாக பண்ணையின் மேலாளர் குமார் என்பவரும் கலந்து கொண்டனர்.

பேச்சு வார்த்தையில் தொழிலாளர்கள் சார்பில் தாங்கள் இரண்டு ஆண்டுகளாக தோட்டகலைப் பண்ணையில் பணியாற்றி வந்தாகவும், தங்களை திடீரென கடந்த 6 மாதங்களாக வேலை தராமல் வேலையில் இருந்து நீக்கி விட்டனர். எங்களுக்கு மீண்டும் பணியை வழங்க வேண்டும் என்றனர்.

அப்போது தோட்டகலை பண்ணை மேலாளர் குமார், இவர்களுக்கு தினக்கூலி தர நிதி கிடையாது. எனவேதான் இவர்களுக்கு வேலை தர முடியவில்லை. நிர்வாகத்தில் இருந்து நிதி வரும்போது வேலைக்கு சேர்த்து கொள்வதாக கூறினார்.

பின்னர் தாசில்தார் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கேட்டுகொண்டததற்கு இணங்க தங்கள் போராட்டத்தை 15 நாட்களுக்கு தள்ளி வைத்து கொள்வதாகவும், 15 நாட்களில் தங்களுக்கு வேலை கிடைக்காவிட்டால் தொடர் போராட்டத்தை செய்வோம் என்றனர்.        

-நவீன் குமார்.