கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையில், மூன்று முறை மாநிங்களவை உறுப்பினர் பதவி வகித்தவர், இரண்டாண்டுகள் மக்களவை உறுப்பினர் பதவி வகித்தவர்.
இதுவரை இவர் தொட்டுப்பேசாத, போராடாத மக்கள் பிரச்சனைகளே இல்லை எனலாம். ஓய்வென்பதையே அறியாமல் புயலை போலவே சுற்றித்திரிகின்ற வைகோ, அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்பதை தன் கட்சியின் கொள்கையாக அறிவித்தவர்.
இன்று குற்றவாளிகளுக்கு குடைப்பிடிக்கும் வேலையை செய்ய தொடங்கியிருக்கிறார். இதன் விளைவாக இவரது நாற்பது ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையில், இவர் கட்டி காப்பாற்றி வந்த கவுரவம் இன்று நாசமாய் போய்விட்டது. முரண்பாடுகளின் மொத்த உருவமாக வைகோ மாறிவிட்டார்.
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்ற வாக்கியத்தை உச்சரிக்க இவருக்கு இனி எந்த தகுதியும் கிடையாது.
அப்படி என்னதான் செய்தார் வைகோ?
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மீதும், சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும், முதன் முதலில் ஊழல் குற்றச்சாட்டுகளை பொது மேடைகளில் பகிரங்கமாக அறிவித்தவரே வைகோதான்.
அப்படிப்பட்ட வைகோ, இன்று சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக மாறியதின் மர்மம் என்ன?
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com