பெருந்தலைவர் காமராஜரின் 113-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, 23.07.2015 வியாழன் மாலை திருச்சி ‘ஜி கார்னர்’ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு கொட்டும் மழையில் உரையாற்றினார்.
மாலை 3 மணிக்கு தொடங்குவதாக இருந்த பொதுக்கூட்டம், காலதாமதமாக தொடங்கியது. இந்நிலையில் மாலை 5 மணிக்கு கொட்ட தொடங்கிய மழை மாலை 6 மணி வரை தொடர்ந்து பெய்தது. மழை பெய்தாலும், அதை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்து கொண்டே ராகுல் காந்தி தனது பேச்சை தொடர்ந்தார். தொண்டர்களும் மழையில் நனைந்து கொண்டே ராகுல் காந்தியின் பேச்சை கேட்டனர்.
-கே.பி.சுகுமார்.