தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பரிந்துரையை அடுத்து, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து தமிழக கவர்னர் ரோசைய்யா நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி வகித்து வந்த போக்குவரத்து துறை, தொழில்துறை அமைச்சராக உள்ள தங்கமணியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.