இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடல் இராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்துல்கலாம் உடலுக்கு, பிரதமர் நரேந்திர மோதி மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், உதயகுமார், தமிழக ஆளுனர் ரோசய்யா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாயு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், கேரள ஆளுநர் சதாசிவம், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தமிழக எதிர்கட்சித் தலைவர் நடிகர் விஜயகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட முக்கிய பிரமுகர்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டு, அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, அப்துல்கலாம் உடலுக்கு முப்படை தளபதிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர், அப்துல்கலாமின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் மத வழக்கப்படி, அப்துல்கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-மா.செந்தில்நாதன்.
-கே.மாதவன்.