ஏழ்மையின் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் பரவை முனியம்மாவுக்கு வறுமை சூழல் நிழவியது. சமீபத்தில் உடல் நலக்குறைவால் பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலமாக ரூ.6 லட்சம் நிதியுதவியும், மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் உதவித் தொகையும் கட்சி நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு நடிகர் விஷால், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தப்படி, குடும்ப நல நிதி ரூ.6 லட்சமும், மாதாந்திர உதவித் தொகை ரூ.6 ஆயிரமும், பரவை முனியம்மாளிடம் 02.08.2015 அன்று, ஜெ.ஜெயலலிதா சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
-கே.பி.சுகுமார்.