யாழ்ப்பாணத்திற்கும், பூநகரிக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் அமைந்துள்ள பூவரசம் தீவில், சட்டவிரோதமான முறையில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து, அதிலிருந்து வெடி மருந்துகளை தனியாக பிரித்து விற்பனை செய்து வந்த விவகாரம், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சட்டவிரோதமான செயல், கடந்த சில ஆண்டுகளாக பூவரசம் தீவில் நடைபெற்று வந்துள்ளது.
போலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அதிரடிப்படையினர் 04.08.2015 அன்று பூவரசம் தீவிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வெடிபொருட்களிலிருந்து, வெடிமருந்துகள் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த சட்டவிரோத செயலை எந்த குழுவினர் மேற்கொண்டு வந்தார்கள் என்பதும், இவர்கள் யாருக்கு இதனை விற்பனை செய்தார்கள் என்பதும், இதுவரையில் வெளிவராதத் தகவல்களாக இருக்கிறது.
-வினித்.