இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜியின் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நேரங்களில் எவ்விதமான ஆறுதல் வார்த்தைகளும் போதுமானதாக இருக்காது. எனினும், தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதன் வாயிலாகத் தங்களது துயரத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இந்த சோகத்தை தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு வழங்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்களது மனைவியாரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன் என, தனது இரங்கல் செய்தியில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.