இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா மறைவுக்கு, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தங்களது மனைவி மறைந்த செய்தியை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-கே.பி.சுகுமார்.