இலங்கை, திருகோணமலை, சம்பூரில், இறுதி யுத்தத்திற்கு பிறகு மீண்டும் குடியேற்றப்பட்ட மக்களை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார்.
திருகோணமலை சம்பூரில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் இன்று நடைபெற்றன.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சர் ஹக்கீம், மத்திய மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-வினித்.