மறைந்த சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ஈரோடு ஆக்ஸ்போர்டு ஓட்டலில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராமசாமி, கோவை மாவட்ட தலைவர் சண்முகம், கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சசிபெருமாள் உருவபடத்துக்கு கீழே தேங்காய், பழம், நுங்கு, கள் போன்றவை வைக்கப்பட்டு இருந்தது. சசிபெருமாள் உருவப்படத்துக்கு கள்ளை படைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர் அனைவருக்கும் கள் வழங்கப்பட்டது.
டாஸ்மாக் மதுபானங்களுக்கும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கும் தான் சசிபெருமாள் எதிரானவர்.
கள்ளை அவர் மதுவாகவோ, போதைப் பொருளாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. உணவின் ஒரு பகுதியாகத்தான் அவர் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறினார்.
இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது?!
சசிபெருமாளின் மரணத்தை இன்னும் எதற்கெல்லாம் பயன்படுத்தப் போகிறார்களோ?அந்த சசிபெருமாளுக்குதான் வெளிச்சம்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.