தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழக சட்டசபைக்கு கூட்டத்திற்கு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வருகை தந்தார். அவரை சபாநாயகர் தனபால், நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
சட்டசபைக் கூட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை, உறுப்பினர்கள் எழுந்து நின்று உற்சாகமாக வரவேற்றனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஜெ.ஜெயலலிதா முதல் முறையாக சட்டசபைக்கு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
சட்டசபை கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் பூ.செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கபட்டது.
உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் சபையை ஒத்தி வைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இன்று முதல் 18 நாட்களுக்கு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நாளை முதல் தொடங்கும்.
–ஆர் அருண்கேசவன்.