தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது, தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை அலுவலக பெண் ஊழியர் வளர்மதி, சென்னை காவல்துறை ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்ய, காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, முன்ஜாமீன் கேட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுரையில் தங்கியிருக்கும்படியும், தல்லாகுளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 10 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இதனிடையே, முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனையை தளர்த்த மறுத்துவிட்டது.
காவல் நிலையத்தில் கையெழுத்திட செல்லும்போது இளங்கோவனுடன் 2 வழக்கறிஞர்கள் செல்லலாம் என்றும், கையெழுத்திட வரும் காட்சியை காவல்துறையும், இளங்கோவன் தரப்பும் வீடியோவில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.