இன்று (05.09.2015) காலை 11 மணியளவில், தேமுதிக தலைவர் விஜயகாந்தும், சுப்பிரமணியசாமியும் சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தித்து இருப்பது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டாலும். இச்சந்திப்பு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் கோபத்தையும், பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
1982-ம் ஆண்டு தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!! என்ற முழக்கத்துடன் ”தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்” பெயர் மாற்றம் செய்யப்பட்டது,
1994-லிருந்து ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை தனது பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என நடிகர் விஜயகாந்த் அறிவித்தார்.
ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மேல் இருந்த பற்றின் காரணமாக, தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் சூட்டினார்.
ஆனால், இன்று விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் ஆதரவாளர் விஜயகாந்தும், 2லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபட்ஷேவின் மனச்சாட்சி சுப்பிரமணியசாமியும், மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருப்பது, தேமுதிக தொண்டர்கள் மத்தியில் கோபத்தையும், பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com