உலக நாடுகளை உலுக்கிய அய்லானின் மரணம்!- கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!  

உயிரோடு.

உயிரோடு.

சடலமாக.

சடலமாக.

child death in turki.jpga

ஈராக் நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. எனவே, தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு தனது குடும்பத்துடன் துருக்கி சென்றார் அப்துல்லா குர்தி என்பவர். இவரது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப் (5), இளைய மகன் அய்லான் (3). கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார் அப்துல்லா.

ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து கள்ளப் படகில் கிரீஸ் புறப்பட்டார். ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்து விடலாம் என்பது அப்துல்லாவின் திட்டம். துருக்கி கடல் பகுதியில் மனைவி குழந்தைகளுடன் திருட்டு படகில் பயணம் செய்யத் தொடங்கினார் அப்துல்லா. இதற்காக மூன்றரை லட்சம் ரூபாயை (5860 அமெரிக்க டாலர்) அவர் செலவழித்தார்.

ஆனால், எதிர்பாராத விதமாக ராட்சத கடல் அலையில் சிக்கி தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவர் இழந்தார். சிறுவன் அய்லான் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

இந்த சம்பவத்துக்கு பின்னர், இரண்டே நாட்களில் அகதிகளாக வந்தேறும் மக்களுக்கு நான் இடம் தருகிறேன், நானும் இடம் தருகிறேன் என ஆஸ்திரிலேயா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு முன்வந்துள்ளன. சிறுவன் அய்லானின் மரணம் இந்த மாபெரும் மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டதும்.

துருக்கி கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்ட சிரியாவின் பச்சிளம் குழந்தை அய்லானின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொழும்பு-07 தும்முல்லை சந்தியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மனிதநேய பராமரிப்பு அமைப்பு ஏற்பாடு செய்தது.

child death in turki

ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தங்களின் அழிவுகளை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு எதிராக கண்டனக் குரல்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது.

அய்லான் போன்ற பச்சிளம் பாலகர்கள் யுத்தக் கொடூரங்கள் காரணமாக உயிரிழப்பதைத் தடுப்பதில் ஆர்வம் கொண்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

-ஆர்.மார்ஷல்.